Skip to content
Scan a barcode
Scan
Paperback Valluvar Vagutha Vazhi [Tamil] Book

ISBN: 8168850254

ISBN13: 9788168850255

Valluvar Vagutha Vazhi [Tamil]

திருவள்ளுவரைப் பற்றியும், அவர் இயற்றிய திருக்குறளைப் பற்றியும் 'ஆராய்ச்சி' என்ற பெயரால் வெளிவந்த கட்டுரைகளும் நூல்களும் கணக்கில் அடங்காதன. முதற் குறளில் வரும் 'ஆதி-பகவன்' என்ற இரு சொற்களைக் கொண்டு எழுந்த கற்பனைக் கதைகள் அளவில.

"வள்ளுவர் நந்தன் குலத்தில் வந்தவர்" என்பர், பிறப்பால் உயர்வு தாழ்வு காணாத பெருந்தகையாளர்கள்.

"அது உண்மையன்று; வள்ளுவர் அப்பழுக்கற்ற அந்தணர்" என்பர், அறிவை அந்தணருக்கே தனி உடைமையாக்குவோர்.

"அதெல்லாம் உண்மை கலந்த பொய்கள்; வள்ளுவர் ஆதி என்னும் புலைச்சிக்கும், பகவன் என்ற அந்தணருக்கும் பிறந்தவர். அதனாற்றான், முதற் குறளில் 'ஆதி-பகவன் முதற்றே உலகு' எனக் குறிப்பிட்டுப் பெற்றோரைப் பெருமைப்படுத்தினார் என்பர் சமரச வாதிகள்.

வள்ளுவர் பிறந்த இடத்தைப்பற்றி எழுந்த வாதங்களும் பலப்பல. "வள்ளுவர் பிறந்த இடம் மதுரையே" என்பர் பாண்டி நாட்டுப் பற்றுடையோர்.

"இல்லை; வள்ளுவர் பிறந்ததும் அவர் வாழ்வாங்கு வாழ்ந்ததும் தருமமிகு சென்னையே" என்பர் தொண்டை மண்டலத் தொடர்புடையோர்.

வள்ளுவரின் சமயம் யாது? அவர் வைணவரா, சைவரா அல்லது சமணரா? என்பதைப்பற்றி நடந்த ஆராய்ச்சிகளுக்க

Recommended

Format: Paperback

Condition: New

$9.99
Ships within 2-3 days
Save to List

Related Subjects

Poetry

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured