தமிழகம், புழுதியிலே எறியப்பட்ட வீணையாக, சரிந்த கோட்டையாக, உடைந்த கண்ணாடியாகக் காட்சியளிக்கிறது. சிவவாக்கியர், கபிலர், இராமலிங்க அடிகளார் போன்ற புலவர்களெல்லாம், தமிழகத்தின் அவல நிலையைச் செப்பனிட முயன்றார்கள். கனல் தெறிக்கும் கருத்துக்களை அம்புகளாக்கி, கவிதை யெனும் வில்லிலே நாணேற்றி, சாதி, மத,சமயக் கோட்பாடுகள், பல தெய்வ வழிபாடுகளென்ற மூட நம்பிக்கை யெனும் நச்சரவத்தைத் தனிமையாக நின்று தாக்கினார்கள், கருவருக்கப்படமுடியாத அந்த மலைப் பாம்புகள் அவர்களைக் கல்லறைக் கனுப்பிவிட்டன
சாதிமத பேதத்தைத் தனிமையாக நின்று தகர்க்க முடியாது என்பதைக் கண்ட கொள்கைக் கோமான் பெரியார், படை திரட்டுகிறார், பழமைப் புற்றுகளைப் படுகுழிகளாக வெட்டித் தள்ளுகிறார்; பகுத்தறிவு என்ற மண்வெட்டி கொண்டு சாதி, மதம், சமயம், சாத்திரம், புராணம், இதிகாசம், வைதீகம், என்ற பல ரக நச்சரவங்கள்- சீறிப் படமெடுத்து புற்றிலிருந்து வெளிக் கிளம்புகின்றன; தமிழினத்திற்கு நஞ்சேற்றி விட்ட நாகப்படைகளை கனலிலேயிட்டு கருக்குகிறார்; கண்டதுண்டமாக்கி அவைகளை அதற்கென வாரீ சாக வரும் மதவெறி வேடுவர்களின் தடைகளைத் தகர்த் தெரிகி&