"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று கண்ணபெருமான் கீதையில் மொழிந்துள்ளார். மார்கழி மாதம் இவ்வாறு சிறப்பு மிக்கதாக இருக்கவும், நாட்டுப்புறங்களில் மார்கழி மாதத்தைப் பீடை மாதம் என்று சொல்லி மங்கல வினைகள் எதனையும் ஆற்றாமல் தவிர்த்து வருகிறார்கள். 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்' என்று திருப்பாவை தொடங்குகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் கொடியாம் ஆண்டாள், ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஆவர்.
"மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்" என்று திருவரங்கத்துறை திருவரங்க நாதரையே தம் மனத்துள் நாயகராக வரித்து வாழ்ந்தவர் கோதை நாச்சியார். பெரியாழ்வார் பூமாலை சூட, கோதை நாச்சியார் திருமாலுக்குப் பாமாலை சூட்டினார். அவர் பாடிய பாடல்கள் இலக்கிய உலகின் இணையற்ற பாடல்கள் எனலாம்.
திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது. திவ்வியப்பிரபந்த வியாக்கியான சக்கரவர்த்தியான பெரியவாச்சான் பிள்ளை சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாம் ஆண்டாளின் பெருமையைப் பின் வருமாறு விளக்கியுள்ளார்
"தேக நலத்தில் சிரத்தையுடைய சாதாரண மனிதர்களை