Skip to content
Scan a barcode
Scan
Paperback Senthamizh Maalai [Tamil] Book

ISBN: 8168878922

ISBN13: 9788168878921

Senthamizh Maalai [Tamil]

அமிழ்தினும் இனிய தமிழ் மணம் கமழும் இத் திரு நாட்டில், தாய் மொழி அன்புதழைக்க வேண்டுமாயின் இளம்பருவத்தில் கல்வி கற்கும் மாணவர்க்கு இன் தமிழ்ச் சுவையை ஊட்டுதல் இன்றியமையாததாகும்.

இந்நோக்கத்தோடு செந்தமிழ்த்தேன் சொரியும் சிலப்பதிகாரம், மீனாட்சியம்மை குறம், குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற் பள், கலிங்கத்துப்பரணி, இராமலிங்க அடிகள் அருட்பா, முதலிய நூல்களினின்றும் சிந்தைக்கும் செவிக்கும் இனிய சில செஞ்சொற் கவிகளைத் தொடுத்து 'செந்தமிழ்மாலை' என் னும் பெயரால் இச்சிறு நூலை வெளியிட்டுள்ளேன்.

தமிழ் மணம் வீசும் தனிப்பூஞ்சோலையில் அன்புடன் கொய்த அருமலர்களாலாய இப்பாமாலையை இளைஞர் புனைந்து இன்புறவேண்டுகிறேன்.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில் ஒழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே

தெக்கணமும் அதிற் சிறந்த திரவிடநற் றிருநாடும்

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழ் அணங்கே.

Recommended

Format: Paperback

Condition: New

$9.99
Ships within 2-3 days
Save to List

Related Subjects

Language Arts

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured