Skip to content
Scan a barcode
Scan
Paperback Pazhani Thirunaamam [Tamil] Book

ISBN: 8190327739

ISBN13: 9788190327732

Pazhani Thirunaamam [Tamil]

"ஒன்றரை மணி நேரமா பேசுகிறீர்கள்?"

''ஆமாம்,"

"எத்தனை பாடல்கள் சொல்வீர்கள்?"

"அநேகமாக ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்வேன். சில சமயங்களில் பாதிப் பாடலோடு நின்றாலும் நின்றுவிடும்."

"அந்தப் பாடல்கள் அவ்வளவு கடினமானவையா? பொருளை விளக்க அவ்வளவு நேரம் எதற்கு?"

"நான் பாடலை விளக்குவதில்லை; அதாவது அதில் உள்ள சொற்களுக்குப் பொருளை விளக்குவதோடு மட்டும் நிற்பதில்லை. அந்தப் பொருளையே விளக்குகிறேன்."

"பொருளை விளக்குவதென்றால் எனக்கு விளங்கவில்லை. அதை முதலில் எனக்கு விளக்குங்கள்."

"முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை என்று ஒரு பாட்டில் வருகிறது. சலிக்காமல் பிறருக்கு ஈந்து அதனால் வறுமையைப் பெறாமல் இருக்கிறாயே என்று சொல்லி நிறுத்தினால் சொற்களுக்குப் பொருள் சொன்னதாக இருக்கும். ஏன் இடவேண்டும், இட்டு மிடிப்பதனால் பயன் என்ன, சலிப்பு வருவது இயல்புதானே என்று கேள்விகளை எழுப்பிக் கொண்டு, விடை சொல்ல முயல்கிறேன். ஈகை என்பது நமக்கும் பிறருக்கும் பயனை உண்டாக்குகிறதென்று விளக்குகிறேன். பற்றறுப்பதற்கு இது அடையாளமாவதையும் சொல்கிறேன். இவற்றிற்கு மேற்கோள், வரலாறு, அநுபவம் என்று இப்படியே அந்தப் பொருளை &

Recommended

Format: Paperback

Condition: New

$12.66
Save $1.33!
List Price $13.99
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Notice | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured