Skip to content
Scan a barcode
Scan
Paperback Patanjali Yoga Soothiram [Tamil] Book

ISBN: 8118040992

ISBN13: 9788118040996

Patanjali Yoga Soothiram [Tamil]

பதஞ்சலி யோக ஸூத்ரங்களின் முதற் பாகம் ஸமாதி பாதம்; அது 51 ஸூத்ரங்கள் கொண்டது; அவற்றுள் 50 ஸூத்ரங்களுக்கு மட்டுமே பாரதியாரின் மொழிபெயர்ப்பும் வ்யாக்யானமும் உள்ளன. பாரதியாரின் வ்யாக்யானம் முன்புள்ள பழைய உரைகளையும், ஸ்வாமி விவேகானந்தர் எழுதிய ஆங்கில உரையையும், மதுரை நாராயணய்யர் எழுதிய ஆங்கில உரையையும் எடுத்துக் காட்டுகின்றது; ஆயினும், ஸூத்ரங்களுக்குப் பாரதியார் கொண்ட கருத்துக்களையும் நன்கு விளக்குவதால் இந்த வ்யாக்யானம் தனிச் சிறப்பு வாய்ந்ததாகின்றது.

ஸூத்ரம் 1. இனி யோகம் சொல்லப்படும்.

ஸூ. 2. யோகம் என்பது சித்த வ்ருத்திகளை அடக்குதல்.

வ்யாக்யாநம் சித்த வ்ருத்திகள் என்பன சித்தத்தின் இயக்கங்கள். மனம்,புத்தி,சித்தம், அஹங்காரம் என்ற நான்கினையும் சேர்த்து மனிதனுக்குள்ளே அந்தக்கரணம் (உட்கருவி) என்று சொல்லுதல் வேதாந்த சாஸ்த்ர முறை. அவையனைத்தையும் ஒன்றாக்கிச் சித்தம் என்று சொல்வது யோக சாஸ்த்ர வழக்கு. பார்வை யென்னும் தொழிலுக்கு, வெளிக் கருவி கண்ணென்றால், உட்கருவி சித்தம். கேள்விக்குப் புறக் கருவி செவி; உட்கருவி சித்தம். இப்படியே அனைத்திற்குங் கொள்க. எனவே, எனது சித்Ī

Recommended

Format: Paperback

Condition: New

$11.39
Save $0.60!
List Price $11.99
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Notice | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured