ஒரு தேர்ந்த கதைசொல்லியின் மிக முக்கியப் பண்பு, வாசகனைத் தன் உலகிற்குள் எப்படி அழைத்துச் செல்கிறான் என்பதுதான். அந்த வகையில், இந்த நாவலின் முதல் சில பக்கங்களை நான் வாசிக்கத் துவங்கியபோது, 2000-களின் பிற்பகுதிக்கு என்னை அறியாமல் நான் பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டேன்.
ஜன்னல் வழியே நகரும் பரணூர் ஏரி, காதுகளில் ஒலிக்கும் யுவனின் பாடல்கள், டூ-ஸ்ட்ரோக் இன்ஜினின் கரகரப்பு, ரஸ்னா பாக்கெட்டுகள், நமிதாவா அசிநா என்ற நண்பர்களின் சுவாரசியமான அரட்டைகள் என அத்தனை எதார்த்தமான, கள்ளமில்லாத ஒரு இளமைக் காலத்தின் வாசனை இந்த நாவலின் பக்கங்கள் எங்கும் வீசுகிறது. கார்த்தி, மஹி, விக்கி, பாம்பு ஆகியோரின் உலகமும் அவர்களின் நட்பும் அத்தனை அழகானது.
ஆனால், வாழ்க்கை எப்போதும் நாம் போடும் கணக்கின்படி நகர்வதில்லை.
விளையாட்டுப் பிள்ளைகளாகத் திரியும் இந்தக் கூட்டத்தின் நடுவே, பக்கத்து கிராமத்துடனான ஒரு சிறு பகை எப்படிப் பூதாகரமாக வெடிக்கிறது என்பதை ஆசிரியர் அசாத்தியமான திரைக்கதையோட்டத்துடன் விவரித்துள்ளார். எளிய மனிதர்களின் இயல்பான வாழ்க்கை, மிக மெல்லிய கோட்டில் ஒரு உளவியல் த்ரில்லரா