Skip to content
Scan a barcode
Scan
Paperback Naanmanigal (Tamil Edition) [Tamil] Book

ISBN: 8117948540

ISBN13: 9788117948545

Naanmanigal (Tamil Edition) [Tamil]

முத்தமிழ்க் காவலர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் ஒழுக்கத்தையும் கடமை உணர்ச்சியையும் உயிரென ஒம்புபவர்கள். ஒழுக்கக் குறை கண்டபோது அவர்கள் எவ்வாறு துடிதுடித்து விடுவார்கள் என்பது அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். அவர்கள் தாம் கண்டவற்றை மக்களுக்கு உணர்த்தி நல்வழிப்படுத்த "அறிவுக்கு உணவு" போன்ற நூல்களை எழுதி இருப்பதுடன், பண்டைய பெரும் புலவர்களது இலக்கிய நூல்களையும் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப உரை நடையில் எழுதி வருகிறார்கள். இந்த வகையைச் சேர்ந்தது முன்னர் வெளிவந்த "மும்மணிகள்" என்ற நூலும் இந்த "நான்மணிகள்" என்ற நூலும், இனி இதைத் தொடர்ந்து ஐந்து மணிகள், மூதுரை முத்து, நல்வழிச்சாறு முதலியனவும் வரவிருக்கின்றன.

கி. ஆ. பெ அவர்களின் நடை அழகிலும் சொல்லாராய்ச்சியிலும் கருத்துச் செறிவிலும் உள்ளத்தைப் பறி கொடுத்து, அவர்களின் புதிய நூல்களைக் காணத் துடித்து நிற்கும் தமிழ் மக்களுக்கு நாங்கள் வழங்கும் பொங்கல் பரிசு நான்கு மணிகள். தமது அறிவுப் படையல்களை அள்ளி வழங்க ஏற்ற கலமாக எங்களை ஏற்றுக் கொண்ட முத்தமிழ்க் காவலர் விசுவநாதம் அவர்களுக்கு எங்கள் நன்றியுī

Recommended

Format: Paperback

Condition: New

$11.39
Save $0.60!
List Price $11.99
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Notice | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured