இத் தொகுப்பில் 1933 முதல் சமீப காலம் வரை எழுதிய கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. உதாரணமாக 'ஈசுவர லீலை' சுதந்தரச் சங்கு வாரப் பத்திரிகை யில் 1933 - இலோ 34-லிலோ வெளியாயிற்று. 'நாகூர் ஆண்டவர்' தினமணி ஆண்டு மலரில் 1935-இல் வெளியாயிற்று. இரண்டாண்டுகளுக்கு முன்பு கலைமகளில் வெளியான கதையான 'வேண்டாவரம், சுதந்தரச் சங்கு வாரப் பதிப்பு. மணிக்கொடி, சிந்தனை, கலைமகள் முதலிய பல பத்திரிகைகளில் மற்றக் கதைகள் வெளிவந்திருக்கின்றன. கலைமகளில் வெளியாகி உள்ள மற்றும் சில கதைகள் இத்தொகுப்பில் இடம் பெறாமல் போய்விட்டன.
ஆமையைப் போல் மெதுவென்று கருதினாலும் சாக்கியனைப் போல் கல்லெறிந்தான் என்று கருதினாலும் நான் கலைமகளை விட்டதில்லை. கலைமகளும் என்னை விடவில்லை.
இவர் எழுத்துலக ஜாம்பவான்களுள் ஒருவர். வக்கீல் பட்டம் பெற்ற இவர், பல ஆண்டுகளாகவே எழுத்துப் பணியில் ஈடுபட்டுத் தொண்டு செய்துவரும் இவர், 'பிச்சமூர்த்தி பாணி' என்ற ஒரு தனிவகை எழுத்தையே தமக்கென்று வகுத்துக் கொண்ட பெருமை பெற்றவர். கதைகள், கட்டுரைகள், குறுநாவல்கள் இவை களைத் தமக்கென அமைத்துக் கொண்ட தனிப்பாணியில் எழுதிவரும் இவர், தாமாகவே வகுத்துக் கொண்ட தனிமுறை யி&