Skip to content
Scan a barcode
Scan
Paperback Kshanappitham [Tamil] Book

ISBN: B0GMVSK98M

ISBN13: 9788199811782

Kshanappitham [Tamil]

தமிழ்ச் சிறுகதை உலகில் புதுமைப்பித்தனின் வழித் தோன்றலாக அடியெடுத்து வைத்து, தமக்கென ஒரு ஸ்தானத்தையும் தேடிக்கொண்டுள்ள எழுத்தாளர் ரகுநாதன் அவர்கள். அன்னார் ஆரம்ப காலத்திலும் அதற்குப் பின்னரும் எழுதிய ஏழு சிறுகதைகள் இந்தத் தொகுதியில் அடங்கியுள்ளன. ஆசிரியர் ரகுநாதனின் கதை சொல்லும் திறனையும் சொல்லாட்சியின் வளத்தையும் வலுவையும் இந்தத் தொகுதியிலும் வாசகர்கள் காண முடியும். இந்தத் தொகுதியின் மறு பதிப்பை ரகுநாதன் நூல்கள் என்ற எங்கள் வரிசையில் சேர்த்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

மனோதத்துவத்தைப்பற்றி ராகவனுக்கு ஒன்றுமே தெரியாது; தெரிந்திருந்தால் அந்தச் சங்கடங்களும் ஏற்பட்டிராது. அற்பச் சபலமும் தட்டியிராது. ஆனால், ராகவனை விட்டுவிடுவோம். உண்மையில் மனித வாழ்க்கை மனோ தத்துவ ரீதியில்தான் நடக்கிறதா?

அது எனக்குத் தெரியாது.

மனிதனுடைய பிரதான குணங்கள் எல்லாம் ரஜோ தமோ சத்வ குணங்களுக்குள்ளேயே அடங்கிவிட்டது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

ரஜோ குணமாகிய காமத்தை அமுங்கடித்தால், தமோ குணமான குரோத உணர்ச்சியின் கை ஓங்கி விடும். குரோதத்தை உள்ளடக்கி&#

Recommended

Format: Paperback

Condition: New

$12.02
Save $0.97!
List Price $12.99
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured