காதலை முன்வைத்த குறுநாவல்கள் இவை. ஒன்று ஆணின் காதல் பற்றியது, மற்றது பெண் காதல் பற்றியது. எளிய வடிவம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் பயின்று வரும் அசலான உளப் போராட்டங்கள் இவற்றை வேறு தளத்துக்கு நகர்த்துகின்றன]. குறிப்பாகப் பாத்திரங்களை அதனதன் நியாயங்களைப் பேச வைத்திருப்பது ஒரு விதப் பன்முகத்தன்மையை வழங்குகிறது. எத்தனை பேசினாலும் காதல் பற்றிய விஷயங்கள் மட்டும் நீர்த்துப் போவதோ தீர்ந்து போவதோ இல்லை. காதலை வியந்துகொண்டோ வெறுத்துக்கொண்டோதான் மனிதன் வாழ முடியும் - இரண்டுக்கும் மத்தியில் எளிதில் கடக்க முடியாது. அதையே இக்கதைகள் அடிக்கோடிடுகின்றன.
ThriftBooks sells millions of used books at the lowest everyday prices. We personally assess every book's quality and offer rare, out-of-print treasures. We deliver the joy of reading in recyclable packaging with free standard shipping on US orders over $20. ThriftBooks.com. Read more. Spend less.