திருச்சியில், 1957 டிசம்பர் கடைசி வாரத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரதிநிதிகளின் விசேஷ மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி தோழர் ஜீவா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவே இப்பிரசுரம்.
கம்யூனிஸ்ட் சகாப்தம், ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகமும், இந்தி - ஆங்கிலம் - தமிழ் ஆகியவற்றின் இருப்பிடம் ஆகியவைப் பற்றி இதில் நன்கு விளக்குகிறார்.
வால்டர் லிப்மன் யார் என்பது ''ஹிந்து' பத்திரிகை படிப்பவர்களுக்குத் தெரியும். அமெரிக்கப் பத்திரிகா உலகிலே தலை சிறந்த அரசியல் விமர்சகர்களில் அவரும் ஒருவர். அவரது கட்டுரைகளை ஹிந்து பத்திரிகையில் படித்தவர்கள் அநேகர் இங்கு இருப்பார்கள். வால்டர் லிப்மனை மென்னஸோடா என்ற அமெரிக்க பல்கலைக் கழகத்தில் பேச அழைத்தார்கள். 'மயக்கத்தின் மரணம்' என்ற தலைப்பில் அவர் பேசினார். அவர் பேச்சில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். அவர் கூறியதை அப்படியே சொல்லுகிறேன், கேளுங்கள்
" எகிப்து நாட்டில் தாலமி என்ற வான நூல் வல்லுனர் இருந்தார். அவர், பூமி பிரபஞ்சத்தின் மையமாக இயங்குகிறது என்றார். பல &