'மூத்தோர் சொல் அமிர்தம்' என்னும் ஒரு பழமொழி உண்டு
அறிஞர் தவத்திரு அடிகளார் அவர்கள் பேச்சும் எழுத்தும் அமுதத்தை ஒத்த அருள் மொழிகள் ஆகும்.
அவரது கருத்துக்களை ஒன்று திரட்டி 'அமுதமொழிகளாக ' வெளிவருகிறது இந்த நூல்.
இனிய கருத்துக்கள், சிந்தனை தரும் முத்துக்கள், அத்துணையும் தேன் துளிகள்.
எனது பக்தி, அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்தது. மனிதனுக்குப் புதிய உணர்வையும் புதிய தெம்பையும் உண்டாக்கி அவனைப் பூரணத்துவத்திற்கு - உயர்ந்த பரிபூரண வாழ்விற்கு அழைத்துச் செல்வதுதான் எனது சமயம்.
எல்லாம் வல்ல இறைவன் நமக்கு இந்தப் பிறப்பைத் தந்தருளியது பிறருக்குச் சேவை செய்து பேறு பெறுவதற்காகத்தான். எனவே பிறருக்குச் சேவை செய்து பேறு பெறுவதுதான் பிறவியின் பயன் - சமயத்தின் சாரம்
இறைவன் சோறு போடமாட்டான்; நிச்சயமாகப் போடமாட்டான். அவன்தான் சோற்றை உண்டாக்கிக் கொள்ள நிலம், நீர், அறிவு, ஆற்றல், உழைக்கக் கைகள் அனைத்தும் கொடுத்திருக்கிறானே
மனிதகுலம் இன்ப அன்பிலே திளைத்து இன்புற்று வாழவே இந்த உலகம் - பேசும் மொழி - ஒழுகும் சமயம் யாவும்
அரசியல் என்பது சமுதாயத்திற்கு ஒரு வேலி போல. சமயம் என்பது