இந்தத் தொகுப்பில் எழுத்தாளர் சாந்தீபிகாவின் 19 சிறுகதைகளும் 3 குறு நாவல்களும் இடம் பெற்றுள்ளன.
அச்சடித்த புத்தகமாகவும், எழுத்தாளரது புனைவுக் கதைகளின் மொத்தத் தொகுப்பாகவும் ஒரு நூல் இருக்கட்டுமே என்கிற எண்ணத்தில் இப்போது இந்த நூல் வெளிவந்திருக்கிறது. (இதிலுள்ள சிறுகதைகளும், குறு நாவல்களும் வேறு தனி மின்நூல்களாக ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன).
ஒரு எழுத்தாளனாய் சாந்தீபிகாவின் ஐம்பது ஆண்டுகாலப் பயணத்தில், அவரது எழுத்தின் பரிணாம வளர்ச்சியை நீங்கள் இந்த நூலின் வழி ஓரளவு படித்து ரசிக்க இயலும். அதற்காக, ஒவ்வொரு கதையும் பிரசுரமான அல்லது எழுதப்பட்ட ஆண்டும் இவற்றில் குறிப்பிட்டிருக்கின்றன.
பெரும்பான்மையான சிறுகதைகள் 1976-2002 கால கட்டத்தில் பிரபல தமிழ் பத்திரிகைகளான ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், மங்கையர் மலர், சாவி இவற்றில் பிரசுரமானவை. அப்படிப் பத்திரிகைகளில் பிரசுரமானபோது வந்திருந்த படங்களும் ஆங்காங்கே சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இதிலுள்ள பெரும்பான்மையான கதைகளும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல், ஒழுக்க, தார்மிக நெறிகள், கட்டுப்பாடுகள், சுகதுக்கங்கள், பலங்கள்,