Skip to content
Scan a barcode
Scan
Paperback Vazhkai Koothu [Tamil] Book

ISBN: B0GMS5TFGG

ISBN13: 9788199887749

Vazhkai Koothu [Tamil]

அருணகிரிநாதர் முருகனுடைய திருவருளால் புலமை பெற்றவர்; கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்; அவன் திருவருளால் பிரபஞ்சச் சேற்றைக் கழுவித் தூய ஆனந்த வாரியில் ஆழும் பேறு பெற்றவர்; தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெற வேண்டும் என்ற கருணை உடையவர். அந்தக் கருணையினால் பாடிய பாடல்களே திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி முதலியவை.

தமக்குப் புலமை முருகன் திருவருளால் வந்ததென்பதைப் பல இடங்களில் அவர் சொல்கிறார். கந்தர் அலங்காரத்தில், முருகன் சிற்றடி, "என்பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ?" என்று பாடுகிறார். அவர் சொல்லுகிற அடி ஏடு அவருடைய உள்ளம். முருகனுடைய சின்னஞ்சிறிய குழந்தைத் திருவடி அவர் உள்ளத்திலே பதிந்ததாம். அதிலிருந்து பாக்கள் வந்தனவாம்.

இந்தப் புத்தகத்தில் "தாவடி யோட்டு மயிலிலும்" என்ற கந்தரலங்காரப் பாட்டு இருக்கிறது. அதில்தான் "என் பாவடி யேட்டிலும் பட்டதன்றோ?" என்று பாடுகிறார்.

இந்தப் புத்தகத்தில் ஏழு அலங்காரப் பாடல்கள் உள்ளன. அருணகிரியாரின் இயல்புகளை உணர இந்த ஏழு பாடல்களும் உதவுகின்றன. அருட்புலமை பெற்ற அவருடைய பக்தித் திறத்தையும், கருணைப் பெருக்கையும், அநுபவ முதிர்ச்சியைய&

Recommended

Format: Paperback

Condition: New

$12.66
Save $1.33!
List Price $13.99
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured