கடவுள் இருக்கிறார்
கடவுளுக்குத் தெரியும்
கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும்
கடவுளுக்குப் பொதுவாக நட
கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்
கடவுள் கைவிடமாட்டார்
கடவுளின்மீது பாரத்தைப் போடு
***
கடவுளைக் கண்டவர் இவர்-பெரிய ஞானி-மூடுடா வாயை
கடவுளா பொறுப்பாளி, நீ செய்கிற தவறுக்கெல்லாம்?
கடவுளா கொடுத்தார் -கொள்ளை அடித்துவிட்டு கடவுளையா சாட்சிக்கு இழுக்கிறாய்
கடவுளையே நம்பிக்கொண்டுகிடடா-காரியம் நடந்துவிடும்-மூடா, உன் கடமையைச் சரியாகச் செய்யாமே, கடவுளைக் கூப்பிடறயா, எதற்கு எடுத்தாலும்
கடவுள் காப்பாற்றுவார் போடா-ஏன் என் எதிரே பல்லைக் காட்டிகிட்டு நிற்கவேணும்-போ, போ-கடவுளைக் கேளுதாச்சொல்லி-தருவார்-போ.
கடவுள் எப்படித்தான் இந்த அக்ரமத்தைப் பொறுத்துக்கொண்டாரோ தெரியவில்லை.
கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று துளியாவது பயந்தா நடக்கிறான், அந்தப் பாவி.
கடவுள்கூடத்தான் பயப்படுகிறார், இப்படிப்பட்டவர்களிடம்.
கடவுள் என்ன செய்துவிட்டார் அவனை-கண்ணைக் குருடாக்கிவிட்டாரா-கைகாலை ஒடித்துவிட்டாரா-கொழுத்துத்தான் கிடக்கிறான்.
கடவுள் கொடுத்தார்னுதான் 'ஜம்பம்' ப