கதைகள் கேட்பதற்குக் குழந்தைகள் விரும்புவர். அவர்கள் சுவைக்கும்படி கதை சொல்லப்பழங்காலத்தில் பாட்டிகள் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் குழந்தை களின் தொணதொணப்புக்கு ஈடு கொடுக்க தினசரி கதைகளை இட்டுக்கட்டிச் சொல்வது வழக்கமாக இருந்தது.
அப்படி இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட கதைகள் தாம் செவிவழியே தொடர்ந்து நாடோடிக் கதைகள் ஆயின.
அந்த நாடோடிக் கதைகளைத் தழுவி முன்னர் "நாலு பழங்கள்", "நல்ல பிள்ளையார்" ஆகிய இரு புத்தகங்களை வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து மூன்றாவதாகத் தேன் பாகு என்னும் இந்த நூலை வெளியிடுகி றோம். பொது மக்கள் ஆதரவு அளித்து உதவ வேண்டுகிறோம்.
கோபாலன் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு வந்திருந்தான். அன்று அமாவாசை, இரவு தோசையைப் பலகாரமாக உண்டான், அதற்குத் தேன்பாகை விட்டார்கள். வெல்லம் காய்ச்சும் போது திரவப்பத்திலே எடுத்து வைப்பார்கள். அதற்குத் தேன்பாகு என்று பெயர். அதைக் கோபாலன் முன்பு சாப்பிட்டறியாதவனா தலால் அதை மிகவும் சுவைத்து உண்டான். இன்னும் அதிகமாக உண்ணவேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்தும் வெட்கத்தினால் கேட்காமல், போட்டதைச் சாப்பிட்டு எழுந்தான்.
அந்தத் தேன்பா