தெய்வ பக்தி இல்லாத ராஜ்நாராயண் தனது அத்தை பெண் பாரதியை திருமணம் செய்ய அமெரிக்காவில் இருந்து மரகதலிங்க புதூருக்கு வருகிறான். ஆனால் வந்த இடத்தில் பூர்வ ஜென்ம நினைவுகள், சித்தரின் சித்து விளையாட்டுகள், மர்மமான பல மரணங்கள் என விதி பல கோணங்களில் அவன் வாழ்வில் விளையாட ஆரம்பித்தது. அந்த குழப்பங்களின் நடுவில் தீட்சிதர், "தொலைந்து போனதை கண்டுபிடிக்க நீ வந்திருக்கிறாய்" என்று சொல்ல என்ன செய்யப் போகிறான் ராஜ்நாராயண்? என்ன தொலைந்தது? அதை கண்டுபிடித்தானா? பாரதியை கைப்பிடித்தானா? இறுதியில் அவன் தெய்வத்தை உணர்ந்தானா? சிவம் அவன் வாழ்க்கையில் நிஜமானானா?