'எங்களின் உசிருக்கு உசிரான ஜனாதிபதி அங்கிளுக்கு.. இல்லையில்லை. ஜனாதிபதி தாத்தாவுக்கு.. அகழி பழங்குடி நல ஹாஸ்டலிருந்து ஏழாம் வகுப்பு மாணவிகள் கண்ணகி, மாதவி எழுதிக் கொண்டது..!' பேனாவை வைத்துக்கொண்டு யோசித்தாள். இவள் விடுபடும் இடத்திலிருந்து மாதவி டிக்டேட் செய்ய ஆரம்பித்தாள். ''எங்களில் ஒருத்திக்கு அம்மை அச்சன் ரெண்டு பேருமே இல்லை. ஒருத்திக்கு அம்மை மட்டும் உண்டு. அவளையும் ஜெயிலில் அடைப்பிச்சுருச்சு போலீஸூ. அதே கதிதான் மாதவியோட பெரியம்மா லட்சுமிக்கும், தாத்தா பாட்டி மாதி, ரங்கனுக்கும் நேர்ந்தது. இங்கே போலீஸ் ரொம்ப மோசம். நல்லவங்களையெல்லாம் அடிச்சுக்கொண்டு போய் ஜெயிலில் வைக்குது. எங்க அம்மா பாட்டி, தாத்தா பெரியம்மா போல நிறைய பேரோட அம்மை, அச்சன் எல்லாம் ஜெயிலில்தான் கிடக்கு. அச்சன்மாருக நிறைய சாராயம் குடிச்சே மரிச்சுப் போகுது. எங்களை மாதிரி குட்டிகள் வீட்டில் இருந்தா இதைப் பார்த்துக் கெட்டுப் போகும்ன்னு பள்ளிக்கூடம், ஹாஸ்டல்னு விடுது. ஆனா இங்கேயும் நாங்க நிம்மதியா இல்லை. ராத்திரியில ஹாஸ்டல்ல பேயோ, பிசாசோ நுழைஞ்சுடுது. பயமுறுத்தது. அதுல நிறைய பேரு கர்ப்பவதியாயிருதுன்னு ஊ
ThriftBooks sells millions of used books at the lowest everyday prices. We personally assess every book's quality and offer rare, out-of-print treasures. We deliver the joy of reading in recyclable packaging with free standard shipping on US orders over $20. ThriftBooks.com. Read more. Spend less.