சேலம் வட்டாரத்தில், சித்தர்பட்டி என்னும் மலைக்கிராமத்தில் உள்ளது சித்தேஸ்வரர் ஆலயம். அக்கோயிலுக்கென்று சில ஆச்சாரங்கள் உண்டு. அதனை மீறுபவர்களுக்கு மரணம் சம்பவிக்கும் என்பது ஐதீகம். அங்குள்ள சுனைநீரால் தீராத நோய்களும் குணமாகி வந்தன. வைரவன் செட்டியரால் கோயில் மகத்துவம் வெளி உலகத்திற்கு தெரியவருகிறது. அவ்வூரிலும், அக்கோயிலிலும் பல மர்மங்கள் ஏற்படுகின்றன. அம்மர்மங்களுக்குக் காரணம் யார்? அது இறைவனின் சக்தியா? அல்லது மனிதர்களின் சதியா? வாசித்து அறிந்துகொள்வோம் நாமும் சில ரகசியங்களை...