கடைச் சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப் பத்து நூறு செய்யுட்களை உடையது. நூறு பாடல்களும் சேர மன்னர்களின் சிறப்பை விரித்து உரைப்பவை. ஒவ்வொரு சேர மன்னன் மேலும் பத்துப் பத்தாகப் பத்துச் சேர மன்னரைப் பற்றிப் பாடியமையால் பதிற்றுப் பத்து என்று பெயர் வந்தது. ஒவ்வொரு பத்தையும் ஒவ்வொரு புலவர் பாடி யிருக்கிறார். இப்போது இந்த நூலில் முதற் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. மற்றத் தொகை நூல் களுக்கு அமைந்ததுபோல இதற்கும் தனியே கடவுள் வாழ்த்து ஒன்று இருந்திருக்க வேண்டும். அதுவும் இப் போது கிடைக்கவில்லை. இப்போதுள்ள பாடல்களில் இரண்டாம் பத்தை இமய வரம்பன் நெடுஞ் சேரலாதனைப் பாராட்டிக் குமட்டூர்க் கண்ணனார் பாடி யிருக்கிறார். மூன்றாம் பத்தில் பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடியுள்ளார். நான்காம் பத்து, களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் புகழை வைத்துக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது. ஐந்தாம் பத்து, கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவனைப் பரணர் பாடியது. ஆறாம் பத்து, ஆடு கோட்பாட்டுச் சேரலா தனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடிய பாடல்கள் அடங்கியது. ஏழாம் பதĮ
ThriftBooks sells millions of used books at the lowest
everyday prices. We personally assess every book's quality and offer rare, out-of-print treasures. We
deliver the joy of reading in recyclable packaging with free standard shipping on US orders over $15.
ThriftBooks.com. Read more. Spend less.