Skip to content
Scan a barcode
Scan
Paperback Pillai Paruvathiley (Tamil Edition) [Tamil] Book

ISBN: 8117948214

ISBN13: 9788117948217

Pillai Paruvathiley (Tamil Edition) [Tamil]

பிறக்கும் போதே எவரும் புகழுடன் பிறப்பதில்லை. முயற்சியால், அறிவால், ஒழுக்கத்தால், தெய்வ பக்தியால், தேச பக்தியால், தன்னம்பிக்கையால் படிப்படியாக முன்னேறி உலகப் புகழ் பெற்றவர் பலர். அவர்களில் இருபது பெரியோர்களின் பிள்ளைப்பருவ நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு ஏற்ற வகையில் கூற முயன்றேன்.

பெரியோரின் பிள்ளைப்பருவ நிகழ்ச்சிகள் மிகவும் சுவையானவை; பயனுள்ளவை. அவற்றைத் தெரிந்து கொள்வதால், நமக்குத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது; தாழ்வுமனப்பான்மை நீங்குகிறது; மேலும் மேலும் உயரவேண்டும் என்ற ஆசை பிறக்கிறது.

இன்று சிறுவராயிருப்பவர்களில் பலர், வருங்காலத்தில் பெரிய மனிதர்களாகத் திகழவேண்டும். அவர்களால் நாடும் உலகும் நற்பயன் பெறவேண்டும். இதுவே என் ஆசை. எல்லாருடைய ஆசையும் இதுவே.

கிரேக்க நாட்டிலே ஒரு பகுதியை, பிலிப் என்ற ஓர் அரசர் ஆண்டுவந்தார். ஒருநாள் அவர் முன்னே, ஏவலர் ஒரு குதிரையைக் கொண்டுவந்து நிறுத்தினர். அதன் நிறம் நல்ல கறுப்பு. நெற்றியிலே நட்சத்திரம் போல் வெள்ளைப் புள்ளி இருந்தது. பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அதனுடைய பார்வை பயங்கரமாக இருந்தது. அந்தக் குதிரை பொல்லாத

முரட்டு

Recommended

Format: Paperback

Condition: New

$10.75
Save $0.24!
List Price $10.99
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Notice | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured