சினிமாவும், பத்திரிகையும் மிகப் பெரிய வெகுஜன சாதனம் அதனால் கோபுரத்தில் இருப்பவர்களைக் குப்பை மேட்டிற்கு அனுப்ப முடியும்
அதேபோல் எங்கோ ஒரு மூலையில் இருப்பவர்களை உலகமே அறியச் செய்யவும் உதவும்
அப்படித்தான்...
எங்கோ ஒரு மூலையில் வெளியுலகமே என்னவென்று தெரியாமல் நாலு சுவருக்குள்ளேயே வாழ்ந்த அம்முப்பாட்டி தன் பேரனுடைய அன்புக்கும், வற்புறுத்தலுக்கும் இணங்கி சினிமாவில் புகுந்து அப்பாட்டி செய்யும் சாகசங்கள்...
ஏதோ ஒரு முழு நீளச் சினிமாப் படத்தையே பார்க்கும் அளவுக்கு கதையோட்டம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.