தென் பாண்டி நாடு, சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கிய பிரதேசம். சமயாச் சாரியார்கள் ஊரூராகச் சென்று தமிழையும் சைவத்தையும் பரப்பிப் பண்பை வளர்த்த பகுதி.
சமய குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்ற பாண்டித் தலங்கள் பதிநான்கினைப் பற்றிய வரலாறும், அவ்வத் தலங்களில் பாடப் பெற்ற பதிகங்களும், அத் தலங்களுக்குச் செல்வதற்குரிய மார்க்கம் முதலியனவும் இந்நூலில் விரிவாகக் கூறப் பெற்றுள்ளன.
தலயாத்திரை செய்ய விரும்புவோருக்கும், தல வரலாற்றினை அறிந்து கொள்ள விரும்புவோர்க்கும் மிகுதும் பயன்படும்.
தமிழ் நாடு பலவகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. அப்படிப் பகுக்கப்பட்ட வகைகளுள் பாண்டிய நாடு என்பதும் ஒன்று. இப்பாண்டிய நாட்டில் இறைவன் உறைவிடங்களாக உள்ள கோவில்கள் பலவாக இருந் தாலும், அவற்றுள் நால்வர்களால் பாடப்பட்ட பெருமை சான்ற தலங்கள் பதினான்காகும். அவையே மதுரை (இது திருவாலவாய் என்றும் கூறப்படும்.) திருவாப்பனூர், திருப் பரங்குன்றம், திருவேடகம், திருக்கொடுங்குன்றம், திருப்புத்தூர், திருப்புனவாயில், திருவிராமேச்சுரம்,திருவாடானை, திருக்கானப் பேர். (இதனைக் காளையார் கோவில் என்பர்) திருப்பூ