உணவே மருந்து என்பதன் அடிப்படையில் உடலுக்கு கேடு விளைவிக்காத பாரம்பரிய உணவு வகைகள் குறித்துதான் இப்புத்தகத்தில் எழுதியுள்ளேன். விருந்து சமையல், பத்திய சமையல், விரத சமையல்கள், பண்டிகை சமையல்களுடன் கேரளத்தின் தொன்மையான கோவில் பிரசாதங்களின் செய்முறைகளும் அக்கோவில்களின் ஸ்தல வரலாறுகளுடன் சுவைபட எழுதியுள்ளேன். இது வெறும் சமையல் புத்தகம் மட்டுமல்ல, பல சுவாரசியமான அனுபவங்களையும் நிகழ்வுகளையும் கூட ஒரு கதை போல் சொல்லி சமைக்கக் கற்றுத்தரும் புத்தகமும் கூட.