ஒரு நாள் காற்று வலுவாக வீசியது. பல மரங்கள் சாய்ந்து விட்டன.ஊரெங்கும் ஒரே புழுதியாக இருந்தது. கொடிமரங்கள் அறுந்து போயின. மக்கள், பறவைகள், விலங்குகள் யாவும் வெளியில் நடமாட முடியாமல் தவித்தன.
காற்று நிமிர்ந்து பார்த்தது. "உலகத்தில் நான் தான் பெரியவன். எல்லாரும் எனக்குப் பணிந்து நடக்கவேண்டும்" என்று கூவியது.
ஆ ஆ ஆ
திடீரென்று ஒரு சிரிப்பொலி கேட்டது.
"யார் சிரிப்பது?" என்று காற்று சினத்துடன் கேட்டது. ஆஆ ஆஆ ஆஆ என்று அந்தச் சிரிப்பொலி பெரிதாகியது.
"என்னைப் பழித்துச் சிரிப்பவன் எவன்? எதிரில் வா பார்க்கிறேன் " என்று கூச்சலிட்டது காற்று.
வெள்ளை வெளேரென்று பனிக்கட்டி அதன் எதிரில் மலை போல் வந்து நின்றது.
"ஏ காற்றே என்ன சொன்னாய்? உலகில் நீதான் வலுவானவனா? என்ன நெஞ்சுரம் உனக்கு? என்னைப்பற்றி உனக்குத் தெரியாதா? உன்னைக் காட்டிலும் நான்தான் வலுவானவன் இனிமேல் நீ வலுவானவன் என்ற எண்ணத்தையே விட்டு விடு "என்று கூறி நிமிர்ந்து நின்றது பனிக்கட்டி.
"இல்லை, நான் தான் வலுவானவன். நீ என்முன் மண்டியிட்டு வணங்கு. இல்லா விட்டால் சும்மாவிட மாட்டேன் " என்று சீறியது காற்று.
"என்ன? நான் உன்முன் மண்டி