இந்தப் பூமியின் பிரதானமான கேள்விகள் இரண்டு தான் ஒன்று கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்பது... அடுத்தது ஒருவன் இறந்தபின் அவனது உயிர் என்னாகிறது என்பது... செல்வம் பத்திரிக்கையின்
சப் எடிட்டரான ராஜேந்திரன் ஒரு கடிதத்தின் மூலம் ஆயக்குடி செல்கிறான். அங்கு நடந்தது என்ன? ஆயக்குடி கொலை கிராமமாக மாறி வரக் காரணம் என்ன? எதற்காக இத்தனை கொலை? கொலையின் குற்றவாளி யார்? பல நாட்களாக தள்ளிப்போகும் நாயக்கரின் மகள் தேன்மொழிக்கு திருமணம் நடக்குமா? வாசித்து அறிந்துகொள்வோம் சுவாரஸ்யமான இக்கதையில்...