பொறுப்பில்லாத தந்தை. அவரை எதிர்க்காத தாய். இளம் வயதிலேயே அனைத்து குடும்ப பொறுப்புகளையும் ஏற்ற அண்ணன் சங்கர். தனக்குக் கீழே இரண்டு சகோதரிகள். இதுதான் காதம்பரியின் குடும்ப நிலை. அண்ணனின் பாரத்தை குறைக்க எண்ணி படிக்காத, சோம்பேறியான, கிராமத்து முரடனான கோபாலை மணந்து கொள்கிறாள். கணவனது ஆடம்பர பழக்கத்தினால் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு, காதம்பரியின் மன உறுதியினாலும் உழைப்பாலும் அக்குடும்பம் மீண்டும் புதுவாழ்வில் தலைதூக்குகிறது. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் காதம்பரி படும் துயரங்களும், அவளது நம்பிக்கைகளும், தன் குழந்தைகளால் ஏற்படும் அதிர்ச்சிகளும் இவை அனைத்தையும் சமாளிக்க நாளைக்கும் நிலவு வரும் என்ற நம்பிக்கையில் நடைபோடும் காதம்பரியுடன் கைகோர்க்க கதையை வாசிக்கலாம்.