மலர்ந்த பூவாடையென...
தெளிந்த புனலோடையென...
சித்திரப் பட்டாடையென...
முத்தமிழ்ப் பாலாடையென...
வித்தாரத் தமிழுலகறிந்த வியத்தகு எழுத்தரசராம் கலைஞரின் இதமான கருத்தோடை - இனிதான கனிச்சாறு - இந்நூல்.
ஒரு சமுதாயத்தை மாற்றமுறச் செய்யவும், உன்னத மானவொரு நிலைக்கு ஏற்றமுறச் செய்யவும் செறிவார்ந்த சிந்தனைகளின் மலர்ச்சியாம் எழுத்தோவியங்களால் முடியும் என்பதை அழுத்தமுறச் சாதித்துக் காட்டிய ஆற்றலுக்குரியவர் கலைஞர். இஃது ஒரு முப்பதாண்டுகளுக்கும் முன்பாகவே விமர்சன வீதியிலே- விவேக அரங்குகளிலே விரிவாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டு விட்ட முடிவாகும்; எழுதி வைத்துவிட்ட தீர்ப்பாகும்.
அத்தகைய கலைஞரின் எழுத்தாற்றலுக்கு சொல் வண்ணம் பூசுவதென்பது கிளிச்சிறகு பொன்னுக்குப் பசுமையைத் தடவுவதாகவே ஆகும்.
படித்தவர்கள் நீங்கள் - பகுத்தறிவுப் பாசறை யின் நூல்களை.
-படிக்கப் போகின்றவர்கள் நீங்கள் - பயன் தரும் பண்பார்ந்த பலப்பல நூல்களை.
அந்தப் பட்டியலில் இந்நூலுமொன்றாய் இணைய விழைகிறோம்.
புரையோடிக் கிடக்கும் சமூகத்தைப் பொறுப்போடு கீறிக் கிளறி, கருத்துக் களிம்பிடும் இந்நூலைப் பத