"கழுதை கெட்டால் குட்டிச் சுவர்" என்ற பழமொழியை அர்த்தம் இல்லாமல் செய்துவிட்டது இந்தக் கழுதை. இந்தக் கழுதை கெடாத கழுதை. அது குட்டிச் சுவருக்கு அருகில்தான் நின்று கொண்டிருந்தது. வெறும் குட்டிச்சுவராக இருந்தால் அங்கே நின்றிருக்காது. சுற்றி லும் புல் தரை இருந்தது. எதிரே ஒரு சிறிய குளம். குள ம் என்றால் படித்துறை, கைபிடிச்சுவர் ஒன்றும் இல்லை. மடுவென்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு வண்ணான் மடு என்று பெயர்.
கழுதை நின்றபடியே தூங்கிக்கொண்டிருந்தது. அதன் மேல் வெயில் படாதபடி குடைபோலப் பாதுகாத்தது குட்டிச் சுவர். அந்தக் குட்டிச் சுவர் மண் சுவர் அல்ல செங்கற்சுவர். மிகவும் ஏழை வீட்டின் பகுதி என்று சொல்வதற்கும் இல்லை; பெரிய பணக்காரனுடைய மாளிகையின் பழைய சின்னம் என்று சொல் வதற்கும் இல்லை.இடிபாடுகளைக் கொண்டு ஆராய்ச்சி நடத்தினால், "நடுத்தரமான குடும்பம் வாழ்ந்து வந்த நாகரிகமான வீட்டின் சிதிலம் இது" என்ற முடிவுக்கு வர நேரும்.
"தம்பீ" என்ற குரல் கழுதையின் உறக்கத்தைக் கலைத்தது.
'ஆடை சுமக்கும் வாகனமே ' என்று மறு படியும் சத்தம் கேட்டது.
'யார் நம்மைக் கூப்பிடுகிறார்கள்? வக்கணையாகக் கூப்பிடுĨ