தமது வாழ்நாளிலேயே ஒரு சிரஞ்சீவிக் கவியாகப் போற்றப்படும் பேறு பாரதியாருக்கும் கிடைக்கவில்லை; திரு. தேசிகவிநாயகம் பிள்ளையவர்களுக்குக் கிடைத்துவிட்டது. அவர்களுடைய கவிகளையெல்லாம் ஒன்று திரட்டி வெளியிடப் பலர் முயன்றனர். ஆயினும் அந்தப் பாக்கியம் எங்களுக்கே வாய்த்தது.
இந்தப் பதிப்பில், பிள்ளையவர்கள் இதுவரையில் இயற்றியுள்ள கவிகளில் கிடைக்கக்கூடியவை யனைத்தும் அடங்கியிருக்கின்றன; இதுவரை எந்தப் பத்திரிகையிலும் வெளிவராதவையும் சிலவுள. தமிழன்பர்கள் இவ் வாடா மாலையின் நறுமணத்தை நுகர்ந்து இன்புறுவார்களென நம்புகிறோம்.
இக்கவிதைகளை யெல்லாம் சேர்த்துச் செப்பனிட்டுத் தந்த சென்னை சர்வகலாசாலைத் தமிழாராய்ச்சித்துறைத் தலைவர் ராவ்சாகிப் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களுக்கு நாங்கள் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். தமது கவிதைகளைத் திரட்டி வெளியிட எங்களுக்கு அனுமதி தந்த ஆசிரியரவர்களுக்கு எங்கள் வணக்கம் உரியதாகும்.
இரண்டரை வருஷங்களுக்கு முன் இக்கவிதைத் தொகுதியின் முதற் பதிப்பு வெளிவந்தது. அவ்வெளியீடு தென்னிந்தியாவிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேயா முதலிய வெளிநாடு&