ரங்கநாயகி
இந்த உலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்திய பெண்மணி - ஆம்... என் தாய்.
ரங்கநாயகி (ஸ்ருதி)
இந்த உலகத்துக்கு நான் அறிமுகப்படுத்திய பெண் - என் மகள்.
ரங்கநாயகி (ஸ்ருதி)
இலக்கிய உலகத்துக்கு நான் அறிமுகப்படுத்திய உன்னதமான தவயோகி - உத்தமமான பெண்மணி - மடிசார் மாமி.
எனக்கு இன்னமும் பிரமிப்பு விலகவில்லை. ஒரு கதாபாத்திரத்தால் ஒரு கதை இந்த அளவு உயரம் தொடமுடியுமா? தொட்டுவிட்டது. லட்சக்கணக்கான வாசகர்களின் நெஞ்சின் ஆழம் வரை சென்று தொட்டுவிட்டது.
மடிசார் மாமி சிரித்தபோது அவளுடன் சேர்ந்து சிரித்தார்கள். அவள் கவலையில் பங்கு கொண்டார்கள். அவளது முயற்சிகள் வெற்றியடைய வேண்டுமே என்று கவலைப்பட்டார்கள். அவளது முடிவைக் கண்டதும் கண்ணீர்விட்டுக் கதறினார்கள்.
ரங்கநாயகியை நான் அறிமுகப்படுத்தினேன் என்பதைவிட தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் ரங்கநாயகி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்பதே உண்மை. அந்தப் பாதிப்பு என்னை விட்டு இன்னமும் விலகவில்லை. இந்த ஆவேசப் புயலை, இதன் அதிரடி முற்றுகையை, இது வாசக நெஞ்சங்களை ஆக்கிரமிக்கும் வேகத்தை இதன் முதல் அத்தியாயத்திலேயே கணித்த