அன்புக் கவிமணி, தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களுடன் என் உள்ளம் பல்லாண்டுகள் பழகியுள்ளது. அவருக்குக் கவிமணிப் பட்டம் கிடைத்திருக்கிறது. ஆனால் தேவியை (தேசிகவிநாயகம் பிள்ளையை) நினைக்கும்போது கொஞ்சுங் குழந்தையின் அன்பே என்முன் நிற்கிறது ஆதலால் நான் அவரை, "அன்புப் புலவர், அன்புக் கவி மணி" என்கின்றேன். அவர் உள்ளம் அன்பு; அவர் சொற் கள் அன்பிற் குழைத்த அமுதம்; அவர் கவிதைகள் கருணையிற் பூத்த அன்பிசை. அவரைக் கவிமணி என்பதை விட அன்புமணி என்பதே பொருந்தும் அவர் உள்ளத்தில் ஓர் அன்புக் குழந்தை,
"பூமகளின் புன்னகை போல் பூத்திடுவோமே-கம்பன் பாமணக்கும் தமிழினைப் போல் பரிமளிப்போமே "
என்று பாடுகிறது தேவி இன்று எழுபது வயதுத் தாத்தா; ஆனால் உள்ளே ஏழு வயதுக் குழந்தையாகவே யிருக்கிறார் வஞ்சமற்ற உள்ளம், கரவற்ற மனம். தமிழ்ப்பணி யென்றால் அவருக்கு வாலிபம் திரும்பிவிடும். நான் 'சிலம்புச் செல்வம்' என்ற நூலை எழுதியபோது, அவர் படுக்கையில் இருந்தார். அதை நான் அவர் பார்வைக்கு அனுப்பத் தயங்கினேன்.
"தயங்காமல் அனுப்புங்கள்; தாங்கள் செய்யும் தமிழ்ப் பணியில் எனக்கும் பங்கு உண்டல்லவா ?" என்று தாயகம் பேசி, என் க