கண்ணன் பிறந்தான் வசுதேவர் குழந்தையை நம் ஆயர்பாடிக்குக் கொண்டுவந்து, மேற்சொன்ன படியே செய்து, மாயையைக் கொண்டு போனார். அதுகாறும் உலகம் இருள் மூண்டது; மழை பொழிந் தது. எல்லா உயிர்களும் மாயவுறக்கத்தில் ஆழ்ந்தன இயற்கை வழிவிட்டது விடிந்ததும் வந்தான் கம்ஸன்; குழந்தை மாயையைப் பற்றி வாளால் வீசினான் "அடே அசுரப் பதரே கொலைபாதகா உன் ரத்தவாளால் காற்றைப் பிளந்தாலும், உன் சினப் புயலால் கதிரை அணைத்தாலும், என் உயிரை அவிக்க முடியாதடா உன் உயிரை வாங்கும் குழந்தை கோகுலத்தில் வளர்கிறான்; கவனம் " என்று மாயை மறைந்தது அசுர மாமா, "அப்படியா? ஹா " என்றெழுந்து ஆயர்பாடியில் வளரும் கண்ணனைக் கண்டு, கொலை செய்யப் பல அசுரரை அனுப்பினான்; அவர்களே இப்படி வந்து தொல்லை செய்கிறார்கள்
நினைத்தாலும் பயமா யிருக்கிற தம்மா பூதகிப்பேய் விஷப்பால் கொடுக்க வந்தாள். முலையு டன் அவள் உயிரையும் உறுஞ்சிவிட்டான், என் கண்ணன் சடகாசுரன் வந்தான். குழந்தை, காலால் உதைத்து நொறுக்கினான். குறாவளியாய் வந்தான் திருணாவர்த்தன். அவனை நசுக்கி யெறிந்து கொன்றான் கண்ணன். கன்றாக வந்தான் ஓர் அரக்கன்; இளங்கண்ணன் அவனைக் காலைவாரி ஒரு கனிமரத்தி