'கனவுகள் இலவசம்' நிறைய வாசகர்களை கவர்ந்த நாவல் இது. குறிப்பாக வாசகிகளை காரணம்... அது அவர்களைப் பற்றிய கதை. சுயமாய் சிந்திக்கிற, சுதந்திர உணர்வுகள் கொண்ட பத்மினி என்கிற பெண்ணின்... திருமணத்திற்கு முன்பும், பின்புமான பிரச்சினைகளை அலசுகிற கதை. தன் முழு வாழ்க்கையையும் நம்பிக்கையோடு ஒரு ஆண்மகனிடம் ஒப்படைத்து திருமண பந்தத்தில் நுழைகிற கதையின் நாயகி பத்மினிக்கும் நூறு கனவுகள் உண்டு. அவளுக்கு அமைகிற நாயகன் எப்படி, அவளுடைய கனவுகளுக்கு என்ன நேர்கின்றன என்பதை படித்து அறியுங்கள்.