எனது அருமை நண்பர் கவிமணி ஸ்ரீ தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் இயற்றிய பாக்களிற் சில இந்நூலில் வெளிவருகின்றன. இவைகள் கலைமகள் முதலிய பத்திரிகைகளுக்குச் சமீப காலத்தில் உதவப்பட்டன. இவைகளைத் திரட்டி, ஒரு கவிதை நூலாக வெளியிட முன்வந்த அருள் - நிலையத்தார்க்குத் தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது.
கவிதையின் இயல்பை வரையறை செய்வதற்குச் சில நூற்றாண்டுகளாக நூற்றுக்கணக்கான இலக்கிய ஆராய்ச் சியாளர்கள் முயன்று வந்திருக்கிறார் கள். ஆனால், ஒருவரது முயற்சியேனும் இதுவரையில் முற்றும் திருப்திகரமாய் முடிந்துள்ளது என்று சொல்வதற் கில்லை. சிவபெருமான் தன்மையைத் தான் கவிதையும் கொண்டிருக்கிறது. அவரது அடியையும் முடியையும் மாலும் அயனுங் காண முடியவில்லை யல்லவா? அதுபோலவே கவிதையின் இயல்பையும் ஆராய்ச்சியாளர் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால், இம் முயற்சிகளெல்லாம் பயன் அற்றனவா? இல்லை; இல்லவே யில்லை.
கவிதையின் இயல்புகள் மிகப்பல. அவைகளும் காலந்தோறும் இடந் தோறும் சூழ்நிலைகளுக்குத் தக்கபடி வேறுபடுகின்றன. அவற்றுள் ஒரு சில அம்சங்களையே ஒவ்வோர் ஆராய்ச்சி யாளரும் அறிய முயல்வது. எனினும், தாம் கூறுவதĭ