Skip to content
Scan a barcode
Scan
Paperback Ganga [Tamil] Book

ISBN: 8118207536

ISBN13: 9788118207535

Ganga [Tamil]

என் சிறுவயதில், என் தகப்பனார், காஞ்சிபுரத்துக்கருகே ஒரு கிராமப் பள்ளிக்கூடத்தின் ஹெட்மாஸ்டர். நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் எதிர் வீட்டிலேயே இருந்தார். நந்திக்கு எண்ணெய்க் காப்பிட்டாற்போல் பெரிய சரீரம், பளபளக்கும் கறுப்பு. சுபாவமான வழக்கத்துக்கு மாறாக தான் அனுட்டித்த சைவத்தில் செருக்கு. அறப்பளீசுர சதகம், தேவாரம், பட்டினத்தார் பாடல், திருவாசகம், திருவண்ணாமலைப் பதிகம், அருணகிரி அந்தாதி, அருட்பா, குறள், நாலடியார் வாயிலிருந்து அப்படி அப்படியே கொட்டும். எங்கிருந்துதான் அந்த ஞாபக சக்தியோ? பேசாத சமயங்களில் ரேழித் திண்ணையில், சுவரில் சாய்ந்தபடி, சுட்டு விரலால் காற்றில் ஏதோ வரைந்து கொண்டிருப்பார்.

முதலியார் சுபாவம் நேரிடையாக, வெளிச்சமாகப் பேசமாட்டார். எதையுமே சொல்லில் ஒளித்துப் பேசுவார்.

"ராமாபரம் (வேணுமென்றுதான் அப்படி அழைக்கிறாரோ?) நீ பிராம்மணப் பிள்ளையாயிருக்கிறாயே, நீ உயர்ந்த குலமாச்சே நாம் இங்கே வந்திருக்கிறோமே இந்த உலகத்தில், எதற்காக என்று சொல்வாயா?"

எனக்கு அப்போ வயது பத்து, பன்னிரண்டிருக்குமா? ஆனால் என்னைப் பெரிய மனிதனாகப் பாவித்து, இதே கேள்வĬ

Recommended

Format: Paperback

Condition: New

$13.29
Save $1.70!
List Price $14.99
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Notice | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured