Skip to content
Scan a barcode
Scan
Paperback Ellam Thamizh [Tamil] Book

ISBN: B0FCSMVS8Z

ISBN13: 9788198858504

Ellam Thamizh [Tamil]

இதற்குமுன் நான் எழுதியுள்ள புது மெருகு என்ற புத்தகத்தைப் போன்றது இது. சங்க நூல்களில் உள்ள குறிப்புக்களைக் கொண்டு பின்னிய வாலாறுகளும், பிற காலத்துச் சதகங்களிலும் தனிப்பாடல்களிலும் உள்ள செய்திகளைக் கொண்டு உருவாக்கிய கதைகளும், கேள்வியினால் தெரிந்தவற்றை ஆதாரமாகக் கொண்ட கதைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

தமிழ்ப் புலவர்கள் தம்முடைய கவித்திறத்தினாலே செய்த செயல்களை ஒவ்வொரு வரலாற்றிலும் காணலாம். அந்தச் செயல்களுக்கு உரம் தந்தது, புலவர்களிடத்தில் இருந்த தமிழ் இவ்வரலாறுகளில் வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் தமிழின் ஆற்றலை வெளிப்படுத்துவன. ஆகவே இதற்கு "எல்லாம் தமிழ்"என்ற பெயர் வைத்தேன்.

ஒரு நாட்டின் பெருமையைத் தெளிவதற்கு இத்தகைய வரலாறுகள் சிறந்த ஆதாரங்களாக விளங்குகின்றன.

கதிரவன் இன்னும் வானத்தில் எழவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் அவன் தன் செங்கதிர்களைப் பரப்பி உலகத்தில் பவனி வரப் புறப்பட்டுவிடுவான். உலகம் விழித்துக்கொண்டது. இயற்கைத் தேவி மலராலும் புள்ளினங்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தாலும் கதிரவனை வரவேற்க ஆயத்தமாக இருக்கிறாள். புல்லுக்கும் ப&#

Recommended

Format: Paperback

Condition: New

$12.02
Save $0.97!
List Price $12.99
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured