இந்தக் கதையின் கதாநாயகி சஞ்சனா காணத் துடிக்கும் முகத்திற்குச் சொந்தக்காரியான நிருபமா, நமக்கு 'ஆசை முகம் மறந்தாயோ'வில் ஏற்கெனவே அறிமுகமானவர்தான். இந்தக் கதையில் தனது கணவனைச் சூழ்நிலையால் பிரிந்து ஆன்மீகத்தில் இழுக்கப்பட்டு இமயத்தில் அமைதியைத் தேடும் அவள் முகத்தைக் காண, சஞ்சனா அவளைத் தேடிச் செல்கிறாள். அந்த முகத்தைக் கண்டாளா சஞ்சனா? என்பதை வாசித்து தெரிந்து கொள்ளலாம்.