Skip to content
Scan a barcode
Scan
Paperback Athai Magal [Tamil] Book

ISBN: B0FCSQ5Q2N

ISBN13: 9788198858573

Athai Magal [Tamil]

'ரத்னம்...ஏ ரத்னம்...ஏட்டி ரத்னம்...ஏளா, ஏவுளா ஏம்பிளா...ஏ ரத்னா.....-ரத்னாபாய்.. ரத்தினாம்பா...ரத்தினம்மா...ரத்னத்தம்மா...ஹொ ஹோஹோ - பேர்களைப் பாருங்கடா ஏட்டி யேட்டி ரத்தினோம்......'

'வவ்வவ்வே...வவ் வவ் வவ்...மோறையைப்பாரு. கொழுப்பு புடிச்சு அலையிதியோ? இல்லே, கேட்கிறேன். ஏட்டியாம். ஏன் சொல்லமாட்டே? ஏட்டியா மில்லா. இன்னமே சொல்லு பார்க்கலாம்.'

இரண்டு குரல்கள். முதல் குரல் ஒரு 'அவன்' . இரண்டாவது ஒரு 'அவள்'.

அவன் ஒரு பையன், பெயர் சுந்தரம். பதின்மூன்று வயதிருக்கலாம். அவளுக்குப் பத்து வயது.

'சொன்னா என்ன செஞ்சிருவியாம்?'என்றான் அவன் ஜம்பமாக.

'இல்லே, சொல்லேன் பார்க்கலாம்' .

'சொன்னா என்னட்டி செஞ்சிருவே? ஏட்டி ஏட்டி ரத்தினேம்..ஏ புள்ளே ரத்தினேம் 'என்று வாய்ப் பாட்டு ராகம் இழுத்தான் பையன். 'ஆனா ஆனா.ஆவேன்னா.... ஈன்னா ஈன்னா ஈயேன்னா'என்று பள்ளிக்கூடத்தில் தொண்டைகிழியக் கத்திக் கூப்பாடு போட்ட பழக்கம்கைவிட்டு விடுமா என்ன அதிலும் அவளைக் கேலி செய்வதிலே அவனுக்குத் தனி மகிழ்வு.

அவள் அவனை கவனித்தாள். அவள் முகத்தில் கோபமும் சிரிப்பும் கொஞ்சி விளையாடின. புள்ளெயாம். ஏன் சொல்லமாட்டே? ஏன் ஐயாப்பிள்ளை, எதுக்காகப் புள்ளெயின்னு சொī

Recommended

Format: Paperback

Condition: New

$10.75
Save $0.24!
List Price $10.99
Ships within 2-3 days
Save to List

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured